Pages

Monday, April 13, 2009

காலை உணவை தவிப்பது நல்லதா?

நம்மில் பலரிடம் இருக்கும் பழக்கங்களில் ஒன்று, காலையில் எதையும் சாப்பிடாமல் இருப்பது. இதனால் உடலுக்கு நன்மை ஏதேனும் உண்டா?

காலை உணவை சாப்பிடாதவர்களைக் காரணம் கேட்டால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள சாப்பிடுவதில்லை என்கிறார்கள்.

அவசர அவசரமாக பள்ளி, கல்லூரிக்குப் புறப்படும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர்கள், குடும்பத்தினருக்குப் பணிவிடை செய்யும் இல்லத்தரசிகள் என்று பல தரப்பினரும் 'காலை உணவு' விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்றனர்.

நேரமின்மையால், காலை உணவை தவிர்த்துவிட்டு செல்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கின்றனர், மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும்.

இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும். இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.

அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், அசதியின்றி இயங்க முடியும்.'உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பதால் எடை கூடுமே தவிர, குறைவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

காலையில் உணவு உட்கொள்ளாததால் மதியம், இரவு நேரங்களில் பசி அதிகரிக்கும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகரிக்கும். இதனால், கலோரி கூடி உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

எனவே, காலை உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவசியம் உண்ண வேண்டும் என்பதை நினைவி கொள்ளுங்கள்.

1 comment: