இரவில் குறைந்தது 7 மணி நேரமாவது நிம்மதியாக தூங்க வேண்டும். அவ்வாறு தூங்காவிடில் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படும்.
மேலும், இரவில் உடலுக்கு போதிய ஓய்வளித்தால்தான் பகலில் புத்துணர்வுடன் எந்த வேலையும் செய்ய முடியும்.
அப்படி இரவில் சரிவர தூக்கமின்றி தவிப்பவர்கள் மருதாணி மலர்களை படுக்கைக்கு அருகில் அல்லது தலையணையில் வைத்துக் கொண்டு உறங்க நன்கு தூக்கம் வரும்.
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் காபி, தேனீர் போன்ற பானங்களை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்தாலும் நல்ல பலன் கிட்டும்.
No comments:
Post a Comment